ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சன் இயக்கியுள்ள திரைப்படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்‘. இது ஒரு நகைச்சுவையான திரில்லர் திரைப்படம். இதில் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜார்ஜ் டயஸ் தயாரிக்கிறார். இது PSN என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் விஜித் பச்சன், முனிஷ்காந்த், மிலானா நாகராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஸ்வினி சந்திரசேகர், ஸ்டண்ட் ஸ்லைவா, மன்சூர் அலிகான் மற்றும் யோகிராம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தரன் குமார் இசையமைக்கிறார். பிரபு தயாளன் மற்றும் சிவா பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். படத்தொகுப்பு சபு ஜோசப்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தங்கர் பச்சன் பேசியதாவது:
“ஒருவனிடம் பணம் நிறைய இருக்கிறது ஆனால் நிம்மதி இல்லை.
இன்னொருவனிடம் பணம் கையில் இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கதை. என் மகன் விஜித் என் இயக்க்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான். இல்லையென்றால் 6 ஆண்டுகளுக்கு முன்பே நடிக்க வைத்திருப்பேன். பல இயக்குனரிடம் கதை கேட்டான். சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. அதில் சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன” என்றார்.
By Hari
Takku Mukku Tikku Thalam – Title Track Lyric | Dharan Kumar | Thankar Bachan | Vijith Bachan | Deva