ஆஸ்திரேலிய சுழல் பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மரணம்.
52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் இருக்கும் தன் வீட்டில் எந்த சுயநினைவும் இல்லாமல் இருக்கவே குடும்பத்தினர் மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், அவரை மீட்க முடியவில்லை. மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுழற்பந்து என்றதும் நம் நினைவுக்கு வருபவர்களில் முக்கியமானவர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 708 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சர்வதேச அளவில் 1001 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடங்கிய காலத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியை வழிநடத்தி முதல் தொடரிலேயே கோப்பையையும் வெல்ல வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல பிரபலங்கள் ஷேன் வார்னேவின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவக், “உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ஷேன் இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை” என ட்விட் செய்திருக்கிறார்.
Shane Warne Last twit:
காலம் எப்படி மாறுகிறது, 10 மணி நேரத்திற்கு முன்பு, ஜாம்பவான் ஷேன் வார்னே மற்றவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்
