தென்னிந்தியாவில் உருவாகும் படங்களை பான் இந்தியா படமாக வெளியிடுவது தான் தற்போதைய ட்ரெண்டிங். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைக்கிறது. தமிழ் , தெலுகு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் தான் பெரும்பாலான படங்கள் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரேயா நடிக்கும் கப்ஸா (Kabza) திரைப்படம் அந்த 5 மொழிகளையும் தாண்டி மராத்தி, ஓடியாவிலும் வெளியிட உள்ளனர். மொத்தத்தில் 7 மொழிகளில் வெளியாகயுள்ளது.

இப்படத்தில் ஸ்ரேயா, கன்னட நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் நடிக்கிறார்கள். எழுத்து மற்றும் இயக்கம் ஆர்.சந்துரு.