KGF 2018 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கன்னட பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். பின்பு, பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த படம் நாடு முழுவதும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
இரண்டாம் பாகத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ‘கேஜிஎஃப் 2‘ படத்தின் வெளியீட்டை படக்குழு முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது KGF-2 ஏப்ரல் 14, 2022 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இந்தியா முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஏப்ரல் 14 ஆம் தேதி KGF2 வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது ஒரு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெறும் TOOFAN பாடலின் லிரிக்கல் வீடியோ மார்ச் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
By: Hari