இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பேவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாறியுள்ளது. இப்படத்திற்கு கௌன் பிரவீன் தாம்பே என தலைப்பிட்டுள்ளனர். இதனை ஜெயபிரத் தேசாய் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 1ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் OTT தளத்தில் வெளியாகும். இதில் பிரவீன் தாம்பேவாக ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ளார். மேலும் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்ப்ரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் தல்படே கூறுகையில் “இக்பால் படத்தில் ஹீரோவாக நடித்து 17 வருடங்கள் கழித்து பெரிய திரையில் பிரவீன் தாம்பேவாக நடித்ததை நினைத்து பெருமைகொள்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவருடன் இணைந்து பழகியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது” என்றார்.
By: Hari
DisneyPlus Hotstar Multiplex Kaun Pravin Tambe | Official Trailer | 1st April | DisneyPlus Hotstar