மம்முட்டி – ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்‘ புதிய படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அவர் இயக்கிய ஜல்லிக்கட்டு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
லிஜோ ஜோஸ் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்னும் புதிய படத்தை இயக்குகிறார். மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுதியுள்ளார். கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாங்கன்னியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, ஒரே கட்டமாக பழனியில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
By Hari
Nanpakal Nerathu Mayakkam Official Teaser | Mammootty | Lijo Jose Pellissery | Mammootty Kampany