கோப்ரா
இமைக்கா நொடிகள் புகழ் ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய தமிழ் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ‘ என்ற தயாரிப்பு நிறுவனத்தில் எஸ்.எஸ்.லலித் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். புவன் சீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் தலைப்பு 25 டிசம்பர் 2019 அன்று அறிவிக்கப்பட்டது.
கோப்ரா ஒரு தமிழ் மொழி அறிவியல் புனைகதை சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது முந்தைய வெற்றி படங்களான டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
’கோப்ரா’வில் இர்பான் பதான் காட்சிகளின் ஷூட்டிங் நிறைவு

’கோப்ரா’ படத்தில் இர்பான் பதான் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக, அந்தப் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.