ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஜாங்கிட் தமிழக டி.ஜி.பி யாக இருந்தவர். இவரது பணி பாராட்டுக்குரியது. குற்றவாளிகளை பிடிப்பதிலும், குற்றங்களை தடுப்பதிலும் முனைப்பாக செயல்பட்டவர். பவாரியா கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க திறம்பட செயல்பட்டவர். இந்த வழக்கின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இந்த சம்பவத்தின் பின்னணி திரைப்படம் தான் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று.
தற்போது ஜாங்கிட் நடிகராக அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி திரைக்கதை வசனம் எழுதியுள்ள படம் குலசாமி. இதில் விமல் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். இப்படத்தை நகைச்சுவை நடிகர் சரவண ஷக்தி இயக்குகிறார். இதிலும் போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார் ஜாங்கிட். சமீபத்தில் குலசாமி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஜாங்கிட் இதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.
By: Hari