இந்தி திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ராஷ்மிக சம்மதித்துள்ளார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி புகழ் பெற்றவர் சமந்தா.
தற்போது சமந்தா பாணியில் ராஷ்மிகாவும் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா.
இப்போது அனிமல் என்ற ஹிந்தி படத்தை இயக்குகிறார். இந்த படத்திலுள்ள ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாட நடகை ராஷ்மிகா சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் பாபி தியோல், ரன்பிர் கபூர், பிரணிதி சோப்ரா, அனில் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட்பை ஆகிய திரைப்படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
By: Hari