உள்குத்து திரைப்படத்தின் பிரீமியர், உலகத்தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 20ம் தேதி, ஞாயிற்று கிழமையன்று மாலை 5.00 மணிக்கு, ஒளிபரப்பாகிறது. உள்ளூர் தாதா ஒருவரோடு, மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கை பயணத்தை இக்கதை சித்தரிக்கிறது.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் மற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உள்குத்து திரைப்படம் பொழுதுபோக்கு அம்சத்துடன், ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகின்ற உணர்வை விவரிக்கின்றது.
இது குறித்து இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது:

“இத்திரைப்பட உருவாக்கத்திற்காக நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகளை கருத்தில் கொள்ளும்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எனது திரைப்படம் இதன் மூலம் சென்றடைவது உறுதி. பழிவாங்கல் மற்றும் நகைச்சுவை என்ற இரண்டு வெவ்வேறு அம்சங்களை இத்திரைப்படம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது. இது எளிதானதாக இருக்கவில்லையென்றாலும், இப்புதிருக்கான அனைத்துப் பகுதிகளும் மிக சரியாக பொருந்தியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.
அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட்(CH.NO: 128), டாடா ஸ்கை(CH.NO: 1515), ஏர்டெல்(CH.NO: 763), டிஷ் டிவி(CH.NO: 1808) மற்றும் வீடியோகான் D2H(CH.NO: 553) ஆகிய அனைத்து DTH தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.
By Hari