கால் பந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால் பந்து வரலாற்றில் இதுவரை உலகிலேயே அதிக கோல்கள் அடித்த நபராக மான்செஸ்டெர் யுனைடெட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.
இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாமுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தார் ரொனால்டோ. இதன் மூலம் தனது கால்பந்து வரலாற்றில் மொத்தமாக 807 கோல்களை அடித்துள்ளார். முன்னதாக 1931-1955 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய செக் குடியரசு வீரர் ஜோசப் பிகான் 805 கோல்கள் அடித்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை ரொனால்டோ முறியடித்துள்ளார்.
By: Hari