சிம்பு நடிக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில், விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார்.
முன்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இப்படத்தை கோகுல் இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகமாக கொரோனா குமார் உருவாகிறது. இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட கேரக்டர் இப்படத்தில் தொடர்ச்சியாக இடம் பெறுவதால், ஒரு சில காட்சிகளுக்காக கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதற்கு முன் செக்க சிவந்தது வானம் திரைப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
By: Hari