‘ஒத்த செருப்பு‘ படத்தை இயக்கி இருந்த இயக்குனர் பார்த்திபன், தற்போது இயக்கும் திரைப்படம் ‘இரவின் நிழல்‘.
ஒரே ஷாட்டில் உருவாகிறது இப்படம். இதனை இயக்குவது மட்டுமல்ல, நடிக்கவும் செய்துள்ளார் பார்த்திபன்.
இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கூட்டணி இரவின் நிழல் திரைப்படம் மூலம் இணைந்துள்ளது.
இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இதில், காளி ஒன்றின் முன்பு முட்டி போட்டு அமர்ந்திருக்கும் பார்த்திபன் மிகவும் ஆக்ரோஷமாக கத்துவது போல அமைந்துள்ளது.
ஒத்த செருப்பு பட வகையில், இரவின் நிழல் படமும் சற்று வித்தியாசமாக ஒரே ஷாட்டில் உருவாகவுள்ளது. இப்படி வித்தியாசமான விஷயங்களை தனது படைப்புகளில் முயற்சி செய்து பார்க்கும் பார்த்திபனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், ரசிகர்களிடையே அதிக வரவேற்பினை பெற்று வருகிறது.
ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக், நடிகர் அபிஷேக்பச்சனை வைத்து, பார்த்திபன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
By Hari