ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் இந்தியவுக்கு 11தங்கம், 7 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஸ்பெயின் விக்டோரியா நகரத்தில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய இப்போட்டி மார்ச் 6ல் நிறைவடைந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக, டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான ப்ரமோத் பகத் 3 தங்க பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மற்றொரு இந்தியரான கிருஷ்ணா நாகரும் இதில் தங்கம் வென்றார்.
இவர்கள் தவிர மானசி ஜோஷி, சுகந்த் கடம், மனீஷா ராமதாஸ், நித்யஸ்ரீ, நிதேஷ் குமார், சந்தியா, தினகரன், சிவராஜன், ருத்திக் மற்றும் பலர் பதக்கம் வென்றுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு என பல பிரிவுகளில் விளையாடி ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Great performance by India para shuttlers at the First BWF International event of 2022
Team is Coming Back With 34 Medals
11 Gold, 7 Silver & 16 Bronze

