நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் செல்வராகவன். இப்படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கி, முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிகில்’ மற்றும் ‘மாகமுனி’ புகழ், நடிகை இந்துஜா ரவிச்சந்தர் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார்.
கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களுக்குப் பிறகு செல்வராகவன் மற்றும் தனுஷ் மீண்டும் இணையும் படம் நானே வருவேன்.
By: Hari