சீனாவில் கனா
கிரிக்கெட் மற்றும் விவசாயம் பற்றிய ஒரு தமிழ் திரைப்படம் தான் கனா. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியுள்ளார். இது அருண்ராஜா காமராஜின் முதல் படம். கிரிக்கெட்டே தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ், தத்ரூபமாக நடித்திருப்பார். திபு நினான் தாமஸ் என்பவர் படத்துக்கு இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மற்றும் ரூபென் படத்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் 2018 திசம்பர் 21 அன்று வெளியானது.
சத்தியராஜ் இப்படத்தில் விவசாயியாக நடித்திருப்பார். இவருக்கு மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வந்திருப்பார்.
பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளிவந்த இந்தப் படம் விளையாட்டு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன் என பலரும் நடித்துள்ள கனா திரைப்படம் சீனாவில் திரையிடப்பட இருக்கிறது. இதற்காக கனா திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து படத்தில் பணிபுரிந்த நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் சத்தியராஜ் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினி படத்துக்கு பின் சீன மொழியில் கனா..