பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி. அனிருத் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் அவர் ஹீரோயின் ஆக நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம். சூரரை போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக ஜொனிதா அறிமுகமாகிறார். நல்ல கதைக்காக காத்திருந்ததாகவும், இக்கதை பிடித்ததால் நடிக்க உள்ளதாகவும் ஜொனிதா கூறியுள்ளார். நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்துவேன் என்கிறார் ஜொனிதா.
By: Hari