சென்னையில் ராதே ஷியாம்(தமிழ்) திரைப்படம் முன்னோட்டம்.
மார்ச் 11,2022 உலகளவில்.
அடுத்த டைட்டானிக் படமாக மாறுமா ராதே ஷியாம்.
காதலும் ♥️ காலமும்

பாகுபலி திரைப்படத்துக்குப் பிறகு பான் இந்திய ஸ்டாராக உருவாகியிருக்கும் பிரபாஸ், புதிதாக நடித்திருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம்.
யூவி கிரியேஷன்ஸ் பேனரில், வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ் ,பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ளனர்.யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் மார்ச் 11,2022 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராதே ஷ்யாம் திரைப்படம், காதல் மற்றும் விதியை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம். 1970 களின் ஐரோப்பாவை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இதில் பூஜா ஹெக்டே பிரேரனாவாகவும், பிரபாஸ் விக்ரமாதித்யாவாகவும், க்ரிஷ்ணம் ராஜூ பரமஹம்ஸவாகவும் மற்றும் சச்சின் கேடேகர், முரளி சர்மா, பாக்கியஸ்ரீ,குனால் ராய் கபூர், ப்ரியாதர்ஷினி, சாஷா சேத்ரி, சத்யன் சிவகுமார் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

By: Hari