ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2021க்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ரவி சாஸ்திரி, 2017க்கு பிறகு முதல் முறையாக வர்ணனையாளராக திரும்புகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022ன் வர்ணனையாளர்களாக பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா நல்ல ஃபாம்மில் இல்லாததால், ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவிற்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது. ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குகிறார். ரெய்னா மட்டுமல்லாமல் ரவி சாஸ்த்ரியும் கிரிக்கெட் வர்ணனைக்கு ஐபிஎல் மூலம் மீண்டும் திரும்புகிறார்.
ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய அவதாரத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்