தி லெஜெண்ட் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ தயாரிப்பில் அந்நிறுவன உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (மார்ச் 4,2022) வெளியாகியுள்ளது.
சரவணன் அருள் தற்போது ஜே.டி.ஜெர்ரி (ஜோசப் டி.சாமி மற்றும் ஜெரால்ட் ஆரோக்கியம்) ஆகியோரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி முன்னனி நடிகர்கள் நடித்த பல விளம்பர படங்களை இயக்கியவர்கள். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் படத்தை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
வைரமுத்து, சிநேகன், பா. விஜய், கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ராஜூ சுந்தரம், பிருந்தா, தினேஷ் நடன இயக்குனராக பணிபுரிகின்றனர்.
கார் ஓட்டத்துடன், வேதியியல் ஆய்வுக்கூடமும், வேதி பொருட்கள், டெஸ்ட்டியூப், பியூரெட், பிப்பெட், கோனிக்கல் கிளாஸ், ரயில் சண்டைக்காட்சிகள் தெறிக்க,மோஷன் போஸ்டரில் கையில் மடக்கிய குடையுடன் சரவணன் தோன்றுகிறார்.
By: Hari