பத்து தல – STR 45
கிருஷ்ணன் கே.டி. நாகராஜன், பொதுவாக கிருஷ்ணா என்று அழைக்கப்படுபவர்- திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் திரைப்படத்துறையின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2006ல் சில்லுனு ஒரு காதல் என்ற காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
இவர் சிலம்பரசன்.T.R நடிக்கும் பத்து தல திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரியா பவானி சங்கர், மனுஷியபுத்திரன், கலையரசன், டீஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இது 2017 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான முஃப்தியின் ரீமேக் ஆகும்.
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி தீம் இசை ஆகியவற்றை அமைத்துள்ளார்.
ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எழுத்து மற்றும் வசனம் – மதன் கார்க்கி.
இப்படம் இந்தாண்டு(2022) திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பத்து தல’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொஞ்சம் வில்லத்தனம் கலந்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறுகிறார்கள். சிம்பு – கெளதம் மேனன் இருவருமே நெருங்கிய நண்பர்கள். மற்றொரு இயக்குநர் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.