வெந்து தணிந்தது காடு என்பது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் திரைப்படமாகும். பி. ஜெயமோகன் எழுதி, ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். சிலம்பரசன்.T.R மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோணி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா‘, ‘அச்சம் என்பது மடமையடா‘ படத்திற்குப் பிறகு சிம்பு – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது இத்திரைப்படம்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுள்ளது.
இப்படத்தில் சிம்பு சிறுவயது தோற்றத்திற்காக 15கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவாரம், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் வெளியாக இருப்பதாகவும் படத்தை மார்ச் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘மாநாடு’ வெற்றியால், ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.