அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம், நல்ல வசூலும் பெற்றுள்ளது. இப்படம் குறித்து சிலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித் குமார் ஆகஸ்டு 5,2021 அன்று வெளியிட்ட கருத்தை நினைவுபடுத்தி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
அதில் “ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் சார்பற்ற நிலைப்பாட்டையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழ விடு. இது சம்மந்தப்பட்டவர்களுக்கான ஒரு நினைவூட்டல். என்றும் நிபந்தனையில்லா அன்புடன் அஜித் குமார்.” என்று கூறியுள்ளார்.