நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. தற்போது இவர்கள் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு இறுதியில் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். நயன் புதிதாக இன்னோவா கார் ஒன்று வாங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் அந்த காருக்கு பூஜை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நயன் மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
By: Hari