திரையுலக இசைப்பயணத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்கிறார் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. 1996ம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் இசையப்பாளராக அறிமுகமானார் யுவன்.
இசையமைக்க ஆரம்பித்தது முதல் இன்றுவரை தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கியுள்ளார். இவரின் சோக பாடல்கள் தனித்துவமாக இருக்கும். யுவனின் மெட்டுகள் துன்பத்திலும் இன்பம் தருவதாக இருக்கும். இவரது காதல் பாடல்கள் கண்ணீர் துளிர்க்கும். அதே பாடல்கள் தான் மீண்டும் காதலிக்கவும் தூண்டும்.
இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறியதாவது:
“இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள். எப்போதும் போலவே என் இசை உங்களை பின் தொடர்ந்து வரும். காதலாக, அன்பு செலுத்தும் விதமாக, நட்பாக என எல்லா தருணங்களிலும் என் இசை உங்களுடன் பயணிக்கும். காலம் மாற மாற, ரசனைகள் மாற மாற எப்போதும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஹிட் பாடல்களை தந்து கொண்டிருப்பேன். அப்பா, மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரமான பட தயாரிப்புகள் எப்போதும் போலவே தொடரும். தொடர்ந்து உங்களுடன் இருப்பேன்” என்றார்.

By: Hari