‘துருவ நட்சத்திரம்’ தமிழில் சீயான் விக்ரம் நடிக்கும் ஸ்பை திரில்லர் திரைப்படம். இதனை பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படம் 2016ல் தயாரிப்பை தொடங்கியது. ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட இரகசிய முகவரான ஜான் மற்றும் அவரது குழுவினர், மர்மமான முறையில் காணாமல் போன அணியின் தலைவரை மீண்டும் கொண்டு வருவதற்கான இரகசிய பணியை மேற்கொள்கின்றனர். இதில் ஜான் என்ற ரகசிய ஏஜென்டாக விக்ரம் நடிக்கிறார். இந்த ஆல்பத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ஒரு மனம்’ வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
பெல்லிசூப்புலு திரைப்பட நடிகை ரித்து வர்மா இப்படத்தில் அறிமுகமாகிறார்.
மேலும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ஆர் பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, முன்னா சைமன், சதீஷ் கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே உள்ளது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன்,வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவை ஜோமோன் டி. ஜான், சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன், மனோஜ் பரமஹம்சா எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் கையாண்டுள்ளனர். படத்தொகுப்பை ஆண்டனி செய்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
By:Hari
Dhruva Natchathiram – Official Teaser | Chiyaan Vikram | Gautham Vasudev Menon