நடிகர் அருண் விஜய், தனது மாமா மற்றும் இயக்குனரான ஹரியுடன் இணைந்து, “யானை” படத்தின் முழு வேலைகளையும் முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிடவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. நடிகர் அருண் விஜய் இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஹரி தனது வழக்கமான பரபரப்பான திரைக்கதையில் கிராமம் மற்றும் நகர்ப்புற பின்னணியில் படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது இப்படம் குறித்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டுள்ளது. யானை படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை KKR சினிமாஸ் வாங்கியுள்ளது. Zee குழுமம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. இப்படம் வரும் நாட்களில் ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.
இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், கருட ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலா ஆகியோர் நடித்துள்ளனர். அருண் விஜய் நடிக்கும் 33வது படம் இது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
By: Hari