பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரெட் சில்லிஸ் என்ற பெயரில் சொந்தமாக பட நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தனது நடிப்பில் உருவாகும் படங்களை தயாரிக்கிறார். அதே சமயம் மற்ற நடிகர்களை வைத்தும் படங்களை தயாரிக்கிறார். சமீபத்தில் பாபி தியோல் நடிப்பில் லவ் ஹாஸ்டல் என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது.
இந்நிலையில் சொந்தமாக ஓடிடி (OTT) நிறுவனத்தை தொடங்குகிறார் ஷாருக்கான். இதற்கு எஸ்.ஆர்.கே பிளஸ் என பெயரிட்டுள்ளார். இயக்குனரான அனுராக் கஷ்யப் இதில் பார்ட்னராக சேர்ந்துள்ளார். இந்த தகவல் அறிந்து சல்மான் கான், ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.