பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்தார் ஜெயம் ரவி. அடுத்து அகிலன் படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் .இந்த படத்தினை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தையும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை SMS, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற பல காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கவுள்ளார். நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் ஆகிய படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ராஜேஷ் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக பணியாற்றினார். இவரது இசையில் கடைசியாக 2019-ல் காப்பான் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம் மற்றும் லெஜன்ட் சரவணா நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஜெயம் ரவி – எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.அந்த வகையில் மீண்டும் இந்த இருவருடனும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் கூட்டணி அமைக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
By: Hari