தமிழ் இசைச் சமூகம் அரிதான பல குரல்களைக் கண்டெடுத்து அதுவழி மொழி வளர்த்திருக்கிறது. பிறமொழிகொண்ட குரலானாலும் தமிழ்செய்து தன்னகத்தே ஏற்றுக்கொண்டு அதைவைத்து செவ்வழி பாட்டிசைத்திருக்கிறது. அந்த வகையில் கவின்மலையாளம் தந்த அநேக மனோகரக் குரல்கள் தமிழ்க்காற்றை கொண்டாடிய காலத்தில் அதில் தனியொரு அலைவரிசையாக இருந்தவர் ஜெயச்சந்திரன் அவர்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனின்
‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘வசந்தகால நதிகளிலே’, ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’
இளையராஜாவின்
‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’, ‘மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்’, ‘கொடியிலே மல்லியப்பூ’
ரஹ்மானின்
‘ஒரு தெய்வம் தந்த பூவே’, ‘என்மேல் விழுந்த மழைத்துளியே’, ‘சித்திரை நிலவு சேலையில் வந்தது’
எல்லாம் இந்தக் குரல் தமிழ்மொழிக்குச் செய்த நற்கூறுகள்.
இன்னும் எத்தனை எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன
அவை போல நல்வாழ்வு வாழ்க ஜெயச்சந்திரன்
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
Credit: Elambarithi Kalyanakumar