பல வித பொருட்களை விற்பனை செய்யும் புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளார் சமந்தா. சினிமா, வெப் சீரிஸ், விளம்பர படங்கள் என பிஸியாக இருக்கம் சமந்தா, அழகு சாதனங்கள், வீட்டை தூய்மைப்படுத்தும் பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட பல விதமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தனது தோழியான ஷில்பா ரெட்டி, ஹைதராபாத்தில் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பார்ட்னராக இணைந்துள்ளார் சமந்தா.
நடிகை சமந்தாவும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இவர் ஒரு மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

இதுதவிர சாகி என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகராமாக நடத்தி வருகிறார்.