பசங்க 2, தடம், சைவம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். இவர் ஸ்டெம் பயாலஜியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். தற்போது , இதற்காக அவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து வித்யா பிரதீப் கூறுகையில்,
“சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றினேன். எனது முயற்சிக்கும், உழைப்புக்கும் பலன் கிடைத்துள்ளது. இப்போது விஞ்ஞானியாகி இருப்பதால் சந்தோஷம் அடைகிறேன். நடிகையாக மட்டும் இருந்துவிட்டு போக விரும்பவில்லை. படித்த படிப்பிற்கு அர்த்தம் இருக்கவே இந்த முயற்சியை எடுத்து ஜெயித்திருக்கிறேன்” என்றார்.
வித்யா பிரதீப்: “I had to achieve this goal through hardship, determination, and sacrifices”
By: Hari