தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files) இந்தி மொழியில் வெளியாகியுள்ள திரைப்படம்.
காஷ்மீர் இனப்படுகொலையின் கொடூரமான மற்றும் நேர்மையான கதையை நம் கண் முன் கொண்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டில், காஷ்மீரி பண்டிட்டுகள் துன்புறுத்தப்பட்டனர். மேலும் அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இறுதியில் கொலை செய்யப்பட்டனர். அந்த இருண்ட வரலாற்றை மக்களிடம் காட்டவே இந்தப் படம் முயற்சிக்கிறது.

இப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கிறது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். அக்னிஹோத்ரியின் ஃபைல்ஸ் ட்ரைலாஜியில் இது இரண்டாவது படமாகும். இதற்கு முன் தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் மற்றும் அதைத் தொடர்ந்து தி டெல்லி ஃபைல்ஸ்.

பேராசிரியை ராதிகா மேனனின்(பல்லவி ஜோஷி) தாக்கத்திற்கு ஆளான கிருஷ்ணா (தர்ஷன் குமார்) என்ற இளம் மாணவனின் பயணத்ததை பற்றியும், அவனது இனப்படுகொலை பற்றியும் நங்கூரம் பாய்ச்சியதுபோல் காட்டியுள்ளது இந்த படம்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளன. மார்ச் 12 அன்று, இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, அவரது மனைவியும் நடிகையுமான பல்லவி ஜோஷி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் உள்ளிட்ட படக்குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். பிரதமர் அவர்களை வாழ்த்தி படத்தைப் பாராட்டினார்.