முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் பலர் உள்ளனர். முகப்பருக்கள் சருமத்தின் பொலிவைக் கெடுக்கும். முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இவற்றை இயற்கையான முறையில் கையாளுவது எப்படி என்பதை காணலாம்.

1. இரவு தூங்கும் முன் எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து, பருக்கள் மீது தடவி மறுநாள் காலையில் தூய நீரில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.
2. கிரீன் டீ தயாரித்து, ஐஸ் கியூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு, முக பொலிவையும் தரும்.
3. முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி, உலர வைத்து பின் தூய நீரில் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றும். பருக்களை விரைவில் குணமாக்கும்.
4. ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதை செய்வதற்கு முன் முகத்தை தூய்மையான நீரில் கழுவ வேண்டும். முகத்தை கழுவியவுடன் செய்வது சருமத்தின் அமிலத்தன்மையை சரி செய்யும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
By: Hari