நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியரின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசான கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலன் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் ‘தேவராட்டம்‘ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அப்போது தொடங்கியது காதல். இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 11ம் தேதி மஞ்சிமா மோகனின் பிறந்த நாளையொட்டி இன்ஸ்டாவில் வாழ்த்திய கவுதம் கார்த்திக், “பிறந்தநாள் வாழ்த்துகள் மோமோ.
உன்னை போன்ற ஒரு வலிமையான பெண் என் வாழ்க்கையில் இணைவதை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க என் அன்பான வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
By: Hari