சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை சமந்தா, விலை உயர்ந்த பச்சை நிற கவுன் அணிந்து பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ மட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் சமந்தாவை கடுமையாக விமர்சித்து, கமென்ட்டுகள் பதிவிட்டனர்.
இதனை அறிந்த நடிகை சமந்தா ஆவேசத்துடன் கூறியதாவது:
பெண்கள் அணிகின்ற ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். பெண்களின் உடை, அவர்களின் இனம், கல்வி, சமூக அந்தஸ்து தோற்றம், தோலின் நிறம் என்று ஒரு பெரிய பட்டியலே நீண்டு கொண்டிருக்கிறது.
நாம் 2022ல் இருக்கிறோம். இன்னமும் பெண்களை அவர்கள் அணியும் ஆடையை வைத்து ஒப்பிடுவதையும், மதிப்பிடுவதையும் உடனே நிறுத்துங்கள். பெண்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, நம்மை மேம்படுத்தும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நம் லட்சியத்தை வேறொருவர் மீது வைப்பது யாருக்கும் எந்த நன்மையும் தராது. ஒரு நபரை பற்றி நாம் அளவிடும் விதத்தையும், புரிந்துகொள்ளும் விதத்தையும் மீண்டும் மாற்றி எழுதுவோம் என்று கூறினார்.