இராணுவத்தில் இணைந்தார் தமிழ் நடிகை
திரைத்துறை, கலைத் துறைகளில் ஈடுபடுவதையே சிலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறை மட்டுமல்லாது இராணுவத்திலும் இணைந்து சாதித்துள்ளார் தமிழ் நடிகை ஒருவர்.
அவர் தான் அகிலா நாராயணன். கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் காதம்பரி. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் அகிலா நாராயணன். இவர் அமெரிக்க வாழ் தமிழ் பெண். கலைத்துறையின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக ,தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர். நடிப்பு மட்டுமல்லாது பாடகியாவும் வலம் வந்த அகிலா, இராணுவத்தில் இணைய முடிவு செய்தார்.
தன் மகளின் விருப்பத்திற்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். பல மாதம் கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றார் அகிலா நாராயணன். தற்போது அமெரிக்க இராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க இராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அகிலா. அமெரிக்க இராணுவத்தின் கடின பயிற்சிகளை முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்து காட்டியுள்ளார் அகிலா நாராயணன்.
இளைய சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்கும் வகையிலும், நைட்டிங்கேள் ஸ்கூல் ஆப் மியூசிக் என்ற இசைப் பள்ளியை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார் அகிலா நாராயணன்.
வீர பெண்மணிக்கு வீர வணக்கம்.
By:Hari