பிரபல இசையமைப்பாளறும் பாடகருமான டி. இம்மான் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர். இந்நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது தனது மறுமணம் குறித்து இம்மான் விளக்கம் அளித்துள்ளார்.
“எனக்கு மனைவியாக வருபவர், என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என் வருங்கால மனைவி சிங்கிள் மதராக இருக்க வேண்டும். அவரது குழந்தைக்கு நான் நல்ல தந்தையாக இருப்பேன். பெண் பாருங்கள். இதுவரை திருமணம் ஆகாத பெண்ணை பார்க்க வேண்டாம். விதவை அல்லது விவாகரத்து ஆன பெண், குறிப்பாக 7 அல்லது 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பவராக பாருங்கள் என்று வீட்டில் சொல்லி இருக்கிறேன். தற்போது என் மகள்களுக்கு 9வயதும், 11வயதும் ஆகிறது. அவர்களுக்கு ஒரு தங்கை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.