பிரபல பாலிவுட் நடிகையான யாமி கவுதம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அமைப்பில் இணைந்துள்ளார். தமிழில் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த இந்தி திரைப்படம் எ தர்ஸ்டே. இப்படத்தில் அவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இப்படம் அவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றமே அவரை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடும் தொண்டு நிறுவனங்களில் இணைய வைத்துள்ளது.
இது குறித்து யாமி கவிதம் கூறிருப்பதாவது:
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்காக பணியாற்றி வரும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இணைந்துள்ளேன். இந்த பிரச்சனையில் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பில் இன்னும் கவனம் செலுத்தவும், புதிய வழிகளை கையாள வேண்டிய நிலையில் இருக்கிறோம். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இணைந்திருப்பது முதல் கட்டம்தான். வரும் காலத்தில் எனது பங்களிப்பை இன்னும் அதிகப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.