உங்களுடன் இறுதிவரை வரப்போகும் துணை யார்?
ஆலோசித்தது உண்டா…
அப்பா?
அம்மா?
மகள்?
மகன்?
கணவன்?
மனைவி?
நட்பு?
சுற்றத்தார்?
உங்களுடைய வாழ்க்கை முழுமைக்கும் உங்களுடன் துணையாக வரப்போவது உங்களின் உடல் தான்.
உங்கள் உடல் செயல்படுவதை நிறுத்திவிட்டால், இறுதியில் உங்களுடன் இருக்கப்போவது யாருமில்லை.
உங்கள் உடலுக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ,அந்த அளவிற்கு உங்கள் உடல் உங்களை பார்த்துக்கொள்ளும்.
நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள், உடலுக்கு எவ்வளவு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது பொறுத்து தான் உங்கள் உடல் உங்களை பாதுகாக்கும்.
உங்கள் உடல் மட்டும் தான் இந்த பூமியில் நீங்கள் உள்ளவரை, உங்களுக்குரிய நிலையான விலாசம். உங்களை தவிர வெளி ஆட்கள் உங்கள் உடலுக்கு பாதுகாப்பு தர இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நுரையீரல்களுக்கு – மூச்சு பயிற்சி(பிராணாயாமம்)
மனதிற்கு – தியான பயிற்சி
முழு உடலுக்கு – யோகா
இருதயத்திற்கு – நடை பயிற்சி
ஜீரண உறுப்புகளுக்கு – நல்ல உணவு
ஆன்மாவுக்கு – நல்ல சிந்தனை
உலகுக்கு – நல்ல செயல்
பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப்போவது, உங்களுடனேயே வரப்போவது
உங்கள் உடல் தான்.
உங்கள் உடல் மட்டும் தான்..
By: Hari