பிரபல இசையமைப்பாளறும் பாடகருமான டி. இம்மான் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர். இந்நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது தனது மறுமணம் குறித்து இம்மான் விளக்கம் அளித்துள்ளார். “எனக்கு மனைவியாக வருபவர், என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என் வருங்கால மனைவி சிங்கிள் மதராக இருக்க வேண்டும். அவரது குழந்தைக்கு நான் நல்ல தந்தையாக இருப்பேன். பெண் பாருங்கள். இதுவரை திருமணம் ஆகாத பெண்ணை பார்க்க வேண்டாம். விதவை அல்லது விவாகரத்து ஆன பெண், குறிப்பாக 7 அல்லது 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பவராக பாருங்கள் என்று வீட்டில் சொல்லி இருக்கிறேன். தற்போது என் மகள்களுக்கு 9வயதும், 11வயதும் ஆகிறது. அவர்களுக்கு ஒரு தங்கை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
Author: Hari Rajesh
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரெட் சில்லிஸ் என்ற பெயரில் சொந்தமாக பட நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தனது நடிப்பில் உருவாகும் படங்களை தயாரிக்கிறார். அதே சமயம் மற்ற நடிகர்களை வைத்தும் படங்களை தயாரிக்கிறார். சமீபத்தில் பாபி தியோல் நடிப்பில் லவ் ஹாஸ்டல் என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் சொந்தமாக ஓடிடி (OTT) நிறுவனத்தை தொடங்குகிறார் ஷாருக்கான். இதற்கு எஸ்.ஆர்.கே பிளஸ் என பெயரிட்டுள்ளார். இயக்குனரான அனுராக் கஷ்யப் இதில் பார்ட்னராக சேர்ந்துள்ளார். இந்த தகவல் அறிந்து சல்மான் கான், ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் காய்ந்துள்ளன. மேலும், கடந்த 2 நாட்களாக மயிலாடு பாறை உள்ளிட்ட சில இடங்களில் தோகை வரை காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் பல அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் அழிந்துள்ளன. மச்சூர் மலைத்தொடர் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ள நிலையில், ஒருபுறம் காற்றின் வேகம் காரணமாக அவ்வப்போது தீ பரவுவது அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விழிப்புணர்வு வீடியோ இதனால், வனத்துறையினர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காட்டுத் தீயை விரைவில் அணைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். வனத்துறையினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவன் ஆகியோர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் மார்ச் 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையிடப்படவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பட குழுவினர், துபாயிலுள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்திற்கு செல்ல உள்ளனர். இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் நடித்துள்ளார். இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கேற்கவில்லை. ஆனால் துபாயில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையால் பண்டிட்கள் அங்கிருந்து உயிர் பயத்துடன் வெளியேறியதை சித்தரிக்கும் இப்படம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பற்றி கருத்து தெரிவிக்க்காமல், அமைதி காத்து வரும் ஹிந்தி திரையுலகினரை விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா. இது குறித்து கங்கனா கூறியிருப்பதாவது: “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படம் பற்றி திரையுலகில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இதன் கதை மட்டுமல்ல, வியாபாரமும் முன்மாதிரியாக இருக்கிறது. இந்த வருடத்தில் மிகவும் வெற்றிகரமான, லாபகரமான படமாக இது இருக்கும். பல கட்டுக்கதைகளையும் முன் முடிவுகளையும் உடைத்து இந்த படம், ரசிகர்களை திரையரங்கிற்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் காலை 6மணி காட்சிகள் கூட நிரம்பி வழிகிறது. இது நம்ப முடியாதது என்று அவர் கூறியுள்ளார். திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள இப்படத்தின் வசூல் விவரங்களை டேக் செய்துள்ள…
நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியரின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசான கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலன் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் ‘தேவராட்டம்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அப்போது தொடங்கியது காதல். இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி மஞ்சிமா மோகனின் பிறந்த நாளையொட்டி இன்ஸ்டாவில் வாழ்த்திய கவுதம் கார்த்திக், “பிறந்தநாள் வாழ்த்துகள் மோமோ. உன்னை போன்ற ஒரு வலிமையான பெண் என் வாழ்க்கையில் இணைவதை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க என் அன்பான வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். By: Hari
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பழங்குடியினரின் நில உரிமை கோரி பாலக்காடு கலெக்டரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து, அய்யன்காளி படை என்று அழைக்கும் நான்கு நபர்களை பற்றிய திரைப்படம். ரமேஷனாக குஞ்சாகோ போபன், அரவிந்தனாக ஜோஜு ஜார்ஜ், பாலுவாக விநாயகன், சிவன்குட்டியாக திலீஷ் போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்தில் 25 ஆண்டுகால போராட்டத்தை மீண்டும் கூறுகிறது படா. மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்பான அய்யன்காளி படையால் ஏற்பாடு செய்யப்பட்டது. டி.ஜி.ரவி, பிரகாஷ் ராஜ், இந்திரன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு சமீர் தாஹிர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுடன் நேர்காணல்களை உள்ளடக்கி, பல ஆய்வுகளுக்கு பிறகு திரைக்கதை கமல் அவர்களால் எழுதப்பட்டது. 1996ல் அமைக்கப்பட்ட, மாவோயிஸ்ட் சார்பு அமைப்பான அய்யன்காளி படையின் நான்கு உறுப்பினர்களை பின்தொடர்ந்து, ஒரு நாள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து கலெக்டரை பிணைக் கைதியாக பிடித்துக் கொள்கிறார்கள். பழங்குடியினர் சட்டத்தில்…
சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை சமந்தா, விலை உயர்ந்த பச்சை நிற கவுன் அணிந்து பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ மட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் சமந்தாவை கடுமையாக விமர்சித்து, கமென்ட்டுகள் பதிவிட்டனர். இதனை அறிந்த நடிகை சமந்தா ஆவேசத்துடன் கூறியதாவது: பெண்கள் அணிகின்ற ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். பெண்களின் உடை, அவர்களின் இனம், கல்வி, சமூக அந்தஸ்து தோற்றம், தோலின் நிறம் என்று ஒரு பெரிய பட்டியலே நீண்டு கொண்டிருக்கிறது. நாம் 2022ல் இருக்கிறோம். இன்னமும் பெண்களை அவர்கள் அணியும் ஆடையை வைத்து ஒப்பிடுவதையும், மதிப்பிடுவதையும் உடனே நிறுத்துங்கள். பெண்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, நம்மை மேம்படுத்தும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நம் லட்சியத்தை வேறொருவர் மீது வைப்பது யாருக்கும் எந்த நன்மையும் தராது. ஒரு நபரை பற்றி நாம் அளவிடும் விதத்தையும், புரிந்துகொள்ளும் விதத்தையும் மீண்டும் மாற்றி…
டர்னிங் ரெட் என்பது பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த கற்பனை நகைச்சுவைத் திரைப்படம். வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. திரைக்கதை, எழுத்தாக்கம் ஷி மற்றும் ஜூலியா. இதனை டோமி ஷி இயக்கியுள்ளார். இது டோமி ஷி இயக்கும் முதல் திரைப்படம். படத்தில் ரோசாலி சியாங், சாண்ட்ரா ஓ, அவா மோர்ஸ், ஹையின் பார்க், மைத்ரேயி ராமகிருஷ்ணன், ஓரியன் லீ, வை சிங் ஹோ, டிரிஸ்டன் அலெரிக் சென் மற்றும் ஜேம்ஸ் ஹாங் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். மெய்” லீ, 13 வயது சீன-கனடிய மாணவி. டொராண்டோவில் வசிப்பவர். லீ குடும்பத்தின் கோவிலை அவர்களின் மூதாதையரான சன் யீக்கு பராமரிக்க மெய் உதவுகிறார். மேலும் அவரது கண்டிப்பான தாயான மிங்கைப் பெருமைப்படுத்த வேலை செய்கிறார். அவள் தன் தனிப்பட்ட நலன்களை மிங்கிடம் இருந்து மறைக்க முயல்கிறாள். அது என்னவென்றால் சிறுவர்கள் மீது அவளுக்கு உள்ள ஈர்ப்பு மற்றும் அவளும் அவளது சிறந்த…
நேரத்தை மாற்றும் உணர்வு. The Adam Project – அமெரிக்க அறிவியல் புனைகதை சார்ந்த அதிரடி நகைச்சுவைத் திரைப்படம். ஜொனாதன் டிராப்பர், டி.எஸ். நவ்லின், ஜெனிபர் பிளாக்கெட் மற்றும் மார்க் லெவின் ஆகியோரால் எழுதப்பட்ட திரைக்கதையிலிருந்து ஷான் லெவி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படம். இதில் Ryan Reynolds, Mark Ruffalo, Jennifer Garner, Walker Scobell, Catherine Keener மற்றும் Zoe Saldana ஆகியோர் நடித்துள்ளனர். சதி ஒரு பைலட்டைப் பின்தொடர்கிறது, அவர் காலப்போக்கில் சென்று, தன்னையே இளைஞனாக சந்திக்கிறார். இப்படத்தை ஷான் லெவி இயக்கியுள்ளார். ஃபியூட்டுவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் மனிதகுலத்தின் நேரடி மோதலில் ஈடுபடும்போது, அதிசயங்களைச் செய்யும் குளிர்ச்சியான தோற்றமுடைய கேஜெட்டுகளை உள்ளடக்கிய மற்றும் ஏராளமான அறிவியல் புனைகதை நடவடிக்கைகள் கொண்ட திரைப்படம். Cini360 Review Board Rating: 7/10 Audience Review: 7.5/10 IMDb: 6.9/10
