உங்களுடன் இறுதிவரை வரப்போகும் துணை யார்? ஆலோசித்தது உண்டா… அப்பா? அம்மா? மகள்? மகன்? கணவன்? மனைவி? நட்பு? சுற்றத்தார்? உங்களுடைய வாழ்க்கை முழுமைக்கும் உங்களுடன் துணையாக வரப்போவது உங்களின் உடல் தான். உங்கள் உடல் செயல்படுவதை நிறுத்திவிட்டால், இறுதியில் உங்களுடன் இருக்கப்போவது யாருமில்லை. உங்கள் உடலுக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ,அந்த அளவிற்கு உங்கள் உடல் உங்களை பார்த்துக்கொள்ளும். நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள், உடலுக்கு எவ்வளவு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது பொறுத்து தான் உங்கள் உடல் உங்களை பாதுகாக்கும். உங்கள் உடல் மட்டும் தான் இந்த பூமியில் நீங்கள் உள்ளவரை, உங்களுக்குரிய நிலையான விலாசம். உங்களை தவிர வெளி ஆட்கள் உங்கள் உடலுக்கு பாதுகாப்பு தர இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நுரையீரல்களுக்கு – மூச்சு பயிற்சி(பிராணாயாமம்) மனதிற்கு – தியான பயிற்சி முழு உடலுக்கு – யோகா இருதயத்திற்கு -…
Author: Cini360
பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி. அனிருத் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் அவர் ஹீரோயின் ஆக நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம். சூரரை போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜொனிதா அறிமுகமாகிறார். நல்ல கதைக்காக காத்திருந்ததாகவும், இக்கதை பிடித்ததால் நடிக்க உள்ளதாகவும் ஜொனிதா கூறியுள்ளார். நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்துவேன் என்கிறார் ஜொனிதா. By: Hari
அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்திற்கு ’தீயவர் குலைகள் நடுங்க’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கியது. இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையாக உருவெடுத்துள்ளது. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் வகையில் அழுத்தமான பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபீஸராக நடிக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் த்ரில்லர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருள் மழையில் குடையுடன் அர்ஜுன் நிற்க,பைபிளை கையில் வைத்துக்கொண்டு மிரட்டல் பார்வையுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…
சென்னையில் ராதே ஷியாம்(தமிழ்) திரைப்படம் முன்னோட்டம். மார்ச் 11,2022 உலகளவில். அடுத்த டைட்டானிக் படமாக மாறுமா ராதே ஷியாம். காதலும் ♥️ காலமும் பாகுபலி திரைப்படத்துக்குப் பிறகு பான் இந்திய ஸ்டாராக உருவாகியிருக்கும் பிரபாஸ், புதிதாக நடித்திருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். யூவி கிரியேஷன்ஸ் பேனரில், வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ் ,பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ளனர்.யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் மார்ச் 11,2022 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராதே ஷ்யாம் திரைப்படம், காதல் மற்றும் விதியை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம். 1970 களின் ஐரோப்பாவை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே பிரேரனாவாகவும், பிரபாஸ் விக்ரமாதித்யாவாகவும், க்ரிஷ்ணம் ராஜூ பரமஹம்ஸவாகவும் மற்றும் சச்சின் கேடேகர், முரளி சர்மா, பாக்கியஸ்ரீ,குனால் ராய் கபூர், ப்ரியாதர்ஷினி, சாஷா சேத்ரி, சத்யன் சிவகுமார் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். By: Hari
பேட் மேன் (2022) டிசி காமிக்ஸின் பேட்மேன் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் தமிழகத்தில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. IMDb – 8.5/10 ஜீகுந்த்(இந்தி) அமிதாப் பச்சான் நடிப்பில் நாகராஜ் மஞ்சுலே இயக்கி உள்ளார். இதனால் இந்த படத்தின் மீது நல்ல வரவேற்பு இருக்கிறது.இந்த படம் ரிலீசாகிவிட்டது. IMDb – 5.3/10 ஹே சினாமிகா: துல்கர் சல்மான் , அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் நான்கு மொழிகளில் நேற்று மார்ச் 3ம் தேதி வெளிவந்தன. திருமணத்திற்குபிந்தைய உறவை மையப்படுத்தி நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருக்கிறார். IMDb – 8.6/10 பீஷ்ம பர்வம் : மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், அமல் நீர்த் தனது சொந்த புரொடக்ஷன்ஸ் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இதர கதா பாத்திரங்கள் படத்தை மெருகேற்றியுள்ளனர் IMDb – 8.4/10 By: Divya
OTT தளங்களில் பீரீமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் வரும் படங்கள், சில நாட்களுக்கு பின் ,பிரபல ஒடிடி தளத்தில் வெளியாகின்றன. DJ TILLU காமெடி வகையில் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குநர் விமலா கிருஷ்ணன் இயக்கத்தில் சித்து, நேஹா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் ஆஹா ஒடிடி- யில் வெளியாகி உள்ளது. By: Divya
வீரமே வாகை சூடும்: விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” மூன்று மொழிகளில் தமிழ் தெலுங்கு கன்னடம், 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. பிரபலங்களும், டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “நோ டைம் டு டை”: ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் தோன்றிய கடைசி திரைப்படம் “நோ டைம் டு டை” அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , ஆங்கிலம், மலையாளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.The invisible thread எனும் இத்தாலிய திரைப்படமும், நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. OBBA எனும் கன்னட படமும் ZEE 5 ல் வெளியாகி உள்ளது. By: Divya
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. தற்போது இவர்கள் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். நயன் புதிதாக இன்னோவா கார் ஒன்று வாங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் அந்த காருக்கு பூஜை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நயன் மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. By: Hari
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நாளை மிகப்பெரிய அறிவிப்பு’ என வைத்திருந்தார். இன்று காலை 10 மணிக்கு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் டைட்டில் மாமன்னன் என அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் வடிவேலு, சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார். அப்படம் தயாராகி வரும் நிலையில், அதன் பிறகு வடிவேலுவின் அடுத்த படமாக மாரி செல்வராஜின் மாமன்னன் படம் அமைந்துள்ளது. சில ஆண்டுகளாக வைகை புயல் வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த ‘மாமன்னன்’ பட அறிவிப்பு மிக பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என அனைத்து விதமான பாத்திரத்திலும் தனது வித்தியாசமான நடிப்பின்…
தி லெஜெண்ட் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ தயாரிப்பில் அந்நிறுவன உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (மார்ச் 4,2022) வெளியாகியுள்ளது. சரவணன் அருள் தற்போது ஜே.டி.ஜெர்ரி (ஜோசப் டி.சாமி மற்றும் ஜெரால்ட் ஆரோக்கியம்) ஆகியோரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி முன்னனி நடிகர்கள் நடித்த பல விளம்பர படங்களை இயக்கியவர்கள். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் படத்தை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வைரமுத்து, சிநேகன், பா. விஜய், கார்க்கி ஆகியோர் பாடல்களை…